உங்களின் ஆதார் அட்டையில் உள்ள பழைய புகைப்படத்தை மாற்றி புதிய புகைப்படத்தை அப்டேட் செய்ய இதனை மட்டும் செய்தால் போதும்.
ஆதார் அட்டை மிக முக்கியமான காரணங்களில் ஒன்று. இந்த ஆவணத்தில் ஒரு நபரின் பெயர் உள்ளிட்ட தகவல்கள் மற்றும் பயோமெட்ரிக் தரவுகள் அனைத்தும் இடம் பெற்றிருக்கும். வருமான வரியை தாக்கல் செய்தல், பல்வேறு வகையான படிவங்களை நிரப்புதல், விமான பயணம் உள்ளிட்ட பல சந்தர்ப்பங்களில் இந்த ஆவணம் பொதுவாக அடையாளச் சான்றாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஆதார் அட்டையில் உள்ள தரவுகளை ஒரு பயனாளி புதுப்பித்து மாற்றலாம். அதற்கு UIDAI என்ற அதிகாரப்பூர்வ இணைய தள பக்கத்தில் அல்லது ஆதார் சேர்க்கை மையத்திற்குச் சென்று தகவல்களை புதுப்பித்துக்கொள்ள முடியும். பல ஆண்டுகளுக்கு முன்னர் எடுத்த ஆதார் அட்டையில் உங்கள் படம் மிகவும் பழைய படமாக இருந்து, அதனை மாற்ற வேண்டும் என்று நீங்கள் கருதினால் இதனை செய்தால் போதும்.
அதற்கு முதலில் ஆதார் சேர்க்கை மையம் அல்லது ஆதார் சேவை மையத்திற்கு செல்ல வேண்டும். இல்லை என்றால் UIDAI என்ற இணையதளமான https://UIDAI.gov.in என்ற இணையதள பக்கத்திற்குச் செல்ல வேண்டும். அதன்பிறகு ஆதார் பதிவு படிவத்தை பதிவிறக்கவும். படிவத்தை நிரப்பவும், அதனை அருகிலுள்ள ஆதார் சேர்க்கை மையத்தில் சமர்ப்பித்து உங்கள் பயோமெட்ரிக் விவரங்களை வழங்க வேண்டும்.
அங்குள்ள நிர்வாகி உங்களின் புகைப்படம் எடுப்பார். இப்போது புதிய புகைப்படத்தை உங்கள் ஆதார் அட்டையில் புதுப்பித்து கொள்வார்கள். அதற்கான கட்டணமும் வசூல் செய்யப்படும். அதற்கு ஒரு ஒப்புதல் சீட்டு வழங்கப்படும். உங்களின் புகைப்படம் புதுப்பிக்கப்பட்டது என்பதை சரி பார்க்க URN என்ற எண்ணை பயன்படுத்தி தகவலைப் பெறலாம்.