Categories
தேசிய செய்திகள்

தீவிரமெடுக்கும் கொரோனா பரவல்… முழு ஊரடங்கு 31-ம் தேதி வரை நீட்டிப்பு..!!

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் கொரோனா தீவிரமடைந்துள்ள காரணத்தினால் அங்கு ஊரடங்கு தொடர்ந்து ஒருவாரம் நீட்டிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா  பாதிப்பு பட்டியலில் மகாராஷ்டிரா மாநிலம் முதல் இடத்தைப் பிடிக்கின்றது. கொரோனா தொற்று  நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. இதை அடுத்து நாக்பூரில் அதிக அளவு கொரோனா ஏற்பட்டுள்ளதால் அங்கு ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.

மகாராஷ்டிரா உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிப்பு ஏற்பட்ட இடங்களில் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது.மகாராஷ்டிராவி, நாக்பூர், அமராவதி, தானே உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது .தொடர்ந்து பாதிப்பு இருந்துவரும் நிலையில் மார்ச் 15ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. நாக்பூரில் முழு ஊரடங்கு 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |