Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அடுத்தடுத்து ஏற்பட்ட தாமதம்…. பதற்றத்தால் மயங்கி விழுந்த பயணி…. சிக்னல் கோளாறால் ஏற்பட்ட பரபரப்பு….!!

ஒவ்வொரு ரயில் நிலையங்களிலும் ரயில் புறப்பட தாமதமானதால் பயணி மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் பணி மற்றும் தொழில் சம்பந்தமாக வெளியே செல்பவர்கள் மின்சார ரயில் சேவையை அதிக அளவு பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் தாம்பரம் செங்கல்பட்டு இடையே மூன்றாவது ரயில் பாதை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இதனால் ரயில் சேவைகளை குறைத்ததோடு, பல்லாவரம், தாம்பரம் பகுதிகளில் இருந்து சில குறிப்பிட்ட நேரங்களில் ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் செங்கல்பட்டில் இருந்து வரும் ரயில்களின் புறப்படும் குறிப்பிட்ட நேரம் அறிவிக்கப்பட்டது.

ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் ரயில்கள் இயங்கவில்லை. இந்நிலையில் செங்கல்பட்டில் இருந்து மின்சார ரயிலில் இருந்து புறப்பட்டு வண்டலூர் ரயில் நிலையத்தில் மட்டும் 20 நிமிடங்களுக்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து தாம்பரம் ரயில் நிலையத்தில் சிக்னல் கோளாறு காரணமாக ரயில் புறப்பட மீண்டும் தாமதமானதால் ரயிலில் பயணித்த பயணிகள் பதற்றத்துடன் காணப்பட்டுள்ளனர். அப்போது ஒரு பயணி திடீரென மயங்கி விழுந்து விட்டார். இதனை பார்த்ததும் அருகில் இருந்தவர்கள் அவருக்கு குடிநீர் முதல் உதவி சிகிச்சை அளித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |