Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பிச்சைக்காரங்க மாதிரி இருக்காதீங்க…. நடிகை கங்கனா ரனாவத்தின் அறிவுரை…. பரபரப்பில் சினி உலகம்…!!

பிச்சைக்காரர்களை போல ஜீன்ஸ் அணியாதீர்கள் என்று நடிகை கங்கனா ரனாவத் அறிவுரை சொல்லியிருக்கிறார்.

பெண்கள் நாகரீகம் என்ற பெயரில் கிழிந்த ஜீன்ஸ் அணிந்து வருகிறார்கள் என்று உத்ரகாண்ட் மாநில முதல்-மந்திரி வீரத்தின் தெரிவித்துள்ளார். மேலும் நான் விமானத்தில் சென்று கொண்டிருந்தபோது தொண்டு நிறுவனம் நடத்தும் ஒரு பெண்ணை சந்தித்தேன். அவரும் கிழிந்த ஜீன்ஸ் அணிந்து இருந்தார். இப்படிப்பட்டவரால் எப்படி சமூகத்திற்கு நல்லது செய்ய முடியும் என்று கூறியுள்ளார்.

அவரது இந்த செய்தியை கேட்ட பல நடிகைகளும், இளம் பெண்களும் கிழிந்த ஜீன்ஸ் அணிந்த புகைப் படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகின்றனர். அந்த வரிசையில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தும் சிறிது மட்டும் கிழிந்த ஜீன்ஸ் அணிந்து புகைப்படம் எடுத்து அதனை அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மேலும், நீங்கள் கிழிந்த ஜீன்ஸ் அணிய விரும்பினால் இந்த படங்களில் இருப்பது போலவே குளிர்ச்சியான ஜீன்ஸ்களை அணியுங்கள். இதுதான் ஸ்டைலாக இருக்கும். இதை விட்டுவிட்டு பிச்சைக்காரர்களை போல கிழிந்த ஜீன்ஸை அணிய வேண்டாம். பல இளைஞர்கள் தற்போது இப்படிதான் அணிகின்றனர் என்று பதிவிட்டுள்ளார்.

இவரின் இந்த கருத்திற்கு பலர் ஆதரவு தெரிவித்து வந்தாலும் சிலர் எதிர்ப்புகளை தெரிவித்து உள்ளன. அதில் சிலர் தீபிகா படுகோனே, டாப்ஸி, ஆலியா பட் உள்ளிட்டோர் கிழிந்த ஜீன்ஸ் அணிந்த படி உள்ள புகைப்படங்களை வெளியிட்டு இவர்களுக்கு தான் கங்கனா ரணாவத் அறிவுரை சொல்லி இருக்கிறார் என்று கூறி வருகின்றனர். இச்செய்தி சினிமா வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |