அமெரிக்காவை சேர்ந்த நபர் 5 கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட நபர் தாம் 16 கொலை செய்ததாக கொடுத்த வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் நியூஜெர்சி பகுதியை சேர்ந்த 47 வயதான சீன் மைக்கேல் லானன் என்பவர் மனைவி உட்பட 5 பேரை கொலை செய்த வழக்கில் நாடு முழுவதும் தேடப்பட்டு கடந்த 8 நாட்களுக்கு முன் கைது செய்யப்பட்டார். ஆனால் அவரை விசாரித்ததில் அவர் இதுவரை 16 கொலை செய்ததாக போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் அவர் நியூஜெர்சி பகுதியை சேர்ந்த 66 வயதுடைய நபரை மார்ச் 8ஆம் தேதி அன்று சுத்தியலால் அடித்து கொன்றதாக கூறியுள்ளார்.சிறுவயதில் அந்த நபர் தமக்கு பாலியல் துன்பம் அளித்ததாக கூறியுள்ளார்.
அந்த நபருக்கு லானன் பணிய மறுத்ததால் முதலில் சுத்தியலால் மிரட்டி உள்ளார். அதனால் ஆத்திரமடைந்த லானன் அவரை சுத்தியலால் அடித்துக் கொன்றதாக கூறியுள்ளார். மேலும் அவர் 15 பேரை மெக்சிகோவிலும் ஒருவரை நியூஜெர்சியிலும் கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.தற்போது லானன் கைது செய்யப்பட்டு வீடியோ இணைப்பு மூலம் நீதிமன்ற விசாரணையில் கலந்து வருகிறார்.