சென்னையில் இன்று முதல் மார்ச் 28-ஆம் தேதி வரை கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது.
இதனையடுத்து மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்தப்படும் நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில் சென்னையில் கொரோனா தடுப்பூசிகள் இலவச முகாம்கள் நடைபெற்று வருகிறது. கபாலீஸ்வரர் கோவில் நூலக கட்டிடத்தில் இன்று முதல் மார்ச் 28ஆம் தேதி வரை 60 வயதுக்கு மேற்பட்டோர், 45 வயதுக்கு மேல் உள்ள பிற நோயாளிகளுக்கு தடுப்பூசி போடப்படும். ஆதாருடன் காலை 9 மணிமுதல் மூன்று மணிக்குள் சென்று போட்டுக் கொள்ளலாம். தொடர்ந்து சென்னை மாநகராட்சியில் வீட்டுவேலை செய்பவர்கள், ஆட்டோ கார் ஓட்டுநர்கள், உணவக ஊழியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.