Categories
உலக செய்திகள்

அமெரிக்காவிடம் அடிபணிந்த மலேசியா…. உங்கள் உறவை முறித்துக் கொள்கிறோம்…. வடகொரியா அதிரடி முடிவு….!!

அமெரிக்காவின் அழுத்தத்திற்கு அடி பணிந்து வடகொரியாவை எதிர்த்து செய்த செயலுக்கு மலேசியாவின் தூதரகத்தை முற்றிலும் துண்டிக்க போவதாக வடகொரியா தெரிவித்துள்ளது.

அமெரிக்காவிற்கும் வட கொரியாவிற்கும் அணு ஆயுத விவகாரத்தில் இருந்து எப்போதும் பிரச்சனை இருந்து கொண்டே தான் இருக்கிறது. இந்நிலையில் தான் வட கொரியாவை சேர்ந்த முன் சோல் மியோங் என்பவர் மலேசியாவில் 10 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் நிலையில் அவர் மீது பண மோசடி வழக்கு பதிவு செய்த அமெரிக்க தங்களிடம் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொண்டனர். இதனால் முன் சோல் மியோங்கை  அமெரிக்காவிற்கு நாடு கடத்துவதற்கு மலேசியா உத்தரவிட்டது.

இதனாலேயே மலேசியாவுடனான தூதரகத்தை துண்டிப்பதற்கு வடகொரியா அறிவித்தது. மேலும் இதுகுறித்து வடகொரியா அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்கா வடகொரியா நாட்டை சேர்ந்தவருக்கு விதித்த பண மோசடி குற்றச்சாட்டு ஒரு பொய்யான கட்டுக்கதை. அமெரிக்காவின் அழுத்தத்திற்கு அடிபணிந்து மலேசியா  வடகொரியாவை எதிர்த்து இவ்வாறு செய்ததால்  மலேசியா உடனான தூதரக உறவை வடகொரியா முற்றிலும் துண்டிக்க போவதாக தெரிவித்துள்ளது.

Categories

Tech |