டெலிவரி செய்யப்ட்ட பொருட்களை நாய் தூக்கி சென்றது சிசிடிவி-யில் பதிவாகியுள்ளது.
அமெரிக்காவில் Jenny Anchondo என்ற தொலைக்காட்சித் தொகுப்பாளினி ஆன்லைனில் சில பொருட்களை ஆர்டர் செய்துள்ளார். ஆனால் அவர் வீட்டிற்கு டெலிவரி செய்யப்படும் பொருட்கள் சில நாட்களாகவே காணாமல் போயுள்ளது. இந்நிலையில் திடீரென்று நள்ளிரவு வீட்டிற்கு முன்பு யாரோ ஒருவர் நடமாடுவதை அவரது கணவர் கவனித்துள்ளார்.
இதனால் தூங்கிக் கொண்டிருந்த Jenny -யை எழுப்பி இருவரும் தங்கள் வீட்டிற்கு முன்பு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் காட்சிகளை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது அதிர்ச்சி சம்பவம் ஒன்று அதில் பதிவாகியிருந்தது. அது என்னவென்றால் வீட்டிற்கு டெலிவரி செய்யப்பட்ட பொருட்களை திருடியது திருடன் அல்ல அது ஒரு நாய். இவ்வளவு நாட்கள் தங்கள் வீட்டின் முன் இருந்த பொருட்களை திருடி சென்றது நாய்தான் என்று தெரியவந்ததால் இருவரும் சிரித்தனர்.
மறுநாள் காலையில் வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு புல்வெளியில் அந்த பார்செல்லை Jenny கண்டுபிடித்துள்ளார். ஆனால் அந்த நாய் யாருடையது என்பதை கண்டுபிடிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வி அடைந்துவிட்டது. இருப்பினும் இவ்வளவு நாட்கள் பொருட்களை திருடியது யார் என்று குழம்பிக் கொண்டிருக்கிறது பதில் கிடைத்துவிட்டது…!!