Categories
உலக செய்திகள்

தடுப்பூசி போட்டுக் கொண்ட பிரதமர்… உடனே மனைவிக்கு பரவிய கொரோனா… அதிர்ச்சி…!!!!

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா  பாதிப்பை குறைப்பதற்காக உலக நாடு முழுவதும் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. அனைத்து நாடுகளிலும் கொரோனா தடுப்பு ஊசி போடப்பட்டு வந்தாலும் மறுபுறம் தொற்றின் வேகம் அதிகரித்துக் கொண்டு வருகிறது. தடுப்பூசி போடுவதற்கு முன்பே ஏராளமான தலைவர்கள் கொரோன பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். அதில் முக்கியமாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் இங்கிலாந்து போரிஸ் ஜான்சன் அகியோர்களாகும் .

தற்போது கொரோனோ தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்த உடன் தலைவர்கள்  தன் நாட்டு மக்களுக்கு முன்னுதாரணமாக தடுப்பூசிகள் போட்டுக் கொண்டனர். அந்த வகையில்  கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பாகிஸ்தான் பிரதமர்  இம்ரான் (67) முதல்கட்ட தடுப்பூசியைப் போட்டுக் கொண்டனர். தடுப்பூசி  போட்டுக்கொண்ட பிறகு  பரிசோதனை செய்தபோது அவருக்கு ஒரு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஆகையால் பிரதமர் இம்ரான்கான் தனது வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டார்.

அவருக்கு மருத்துவர்களின் மூலம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது அவரின் உடல்நிலை சீராகத்தான் இருப்பதாகவும் அவரை நாங்கள் அவ்வப்போது கண்காணித்து வருவதாகவும் மருத்துவ உதவியாளர் டாக்டர் பைசல் சுல்தான் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனிடையில் பிரதமர் இம்ரான்கானின் மனைவி பஸ்ரா பீவிக்கும் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொண்ட போது அவருக்கும் வைரஸ் தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் அவரையும் தனிமைப்படுத்தி மருத்துவர்கள் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். இந்த செய்தி பாகிஸ்திஸ்தான் மக்களுக்கு பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |