Categories
உலக செய்திகள்

ஜோ பைடன் கூறிய சர்ச்சைக்குரிய கருத்து… ரஷ்யாவிடம் மன்னிப்பு கேட்ட அமெரிக்க குடிமக்கள்… தகவலை வெளியிட்ட ரஷ்யா தூதர்..!!

ரஷ்ய அதிபரை பற்றி சர்ச்சைக்குரிய கருத்து கூறிய ஜோ பைடனுக்காக அமெரிக்க குடிமக்கள் மன்னிப்பு கடிதம் அனுப்பியதாக ரஷ்ய தூதர் தகவல் வெளியிட்டுள்ளார்.

கடந்த வாரம் ஏபிசி நியூஸ் நேர்காணலில் அமெரிக்க அதிபரான ஜோ பைடனிடம்’ ரஷ்ய ஜனாதிபதி புடின் கொலையாளி என்பதை நம்புகிறீர்களா’ என்று கேட்கப்பட்ட கேள்விக்கு ‘ஆம் அதை நான் ஏற்கிறேன் ‘என்று கூறியுள்ளார்.மேலும்  2020 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷ்யா தலையிட்டதற்காக நிச்சயம் பதிலடி பெரும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த இரண்டு கருத்துக்களும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.அதனால் ரஷ்யாவிடம் ஜோ பைடன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியது .

இந்நிலையில் அமெரிக்காவுக்கான ரஷ்ய தூதர் அன்டோலி அன்டோனோவ்  கூறுகையில்,ஜோ பைடனின் கருத்தில் முரண்பாடு இருப்பதால் அவருக்காக அமெரிக்க குடிமக்கள் மன்னிப்பு கடிதம் அனுப்பியதாக கூறினார். மேலும்  அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிற்கான உறவை வளர்ப்பது குறித்து ஆதரவாக கடிதம் எழுதிய மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.

Categories

Tech |