கீர்த்தி சுரேஷின் ரங் தே திரைப்படத்தின் ட்ரைலர் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். இவர் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடியாக நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். தற்போது இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். மேலும் தெலுங்கில் ரங் தே, குட்லக் சகி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இப்படங்களின் டீஸர்கள் சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்நிலையில் ரங் தே படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இப்படம் வரும் மார்ச் 26 ஆம் தேதி வெளியிடப்படும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் தற்போது இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.