தேங்காய் கேக் செய்ய தேவையான பொருட்கள்:
மைதா மாவு – 2 கப்
தேங்காய் துருவல் – 1 அரை கப்
சர்க்கரை – 1 அரை கப்
பேக்கிங் பவுடர் – 1 தேக்கரண்டி
பட்டர் – 1 கப்
பால் – 1 கப்
முட்டை – 3
உப்பு – 1 சிட்டிகை
வென்னிலா எஸன்ஸ் – 1 தேக்கரண்டி
ரவை – அரை கிலோ
ஏலக்காய் – 5
செய்முறை:
ஒரு பெரிய பவுலில் மைதா மாவு, உப்பு, சர்க்கரை, பேக்கிங் பவுடரை சேர்த்து கூலாக நன்கு கலந்து வைக்கவும். மேலும் அதனுடன் பட்டரை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
மற்றோரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கலந்ததும், அதனுடன் பால், வென்னிலா எஸன்ஸை சேர்த்து நன்கு கலந்ததும், மைதா மாவு கலவையில் ஊற்றி நன்கு கரண்டியால் கலந்தபின், அதில் பாதியளவு துருவிய தேங்காயை மட்டும் போட்டு நன்கு மாவில் சுற்றிலும் படும்படி நன்கு கலந்து கொள்ளவும்.
பின்னர் மைக்ரோ அவனில் வைக்க கூடிய போதுமான அளவுக்கு உள்ள சிறிய பாத்திரத்தை எடுத்து அதன் உள்பகுதியில் சுற்றிலும் பட்டரை ஊற்றி சுற்றிலும் படும்படி நன்கு தடவி பேக்கிங் செய்து கொள்ளவும்.
மேலும் பேக் செய்த பாத்திரத்தில், கலந்து வைத்த கலவையை ஊற்றி சுற்றிலும் படும் அளவுக்கு பரப்பி விட்டபின், அதை அப்படியே மைக்ரோ அவனில் வைத்து 160 டிகீரியில் அளவுக்கு வைத்து, அவனில் அரை நிமிடம் நன்கு வேக வைத்து எடுத்து கொள்ளவும்.
இறுதியில் வேக வைத்த கேக்கை அவனிலிருந்து எடுத்ததும், அதன் மேல் மீதியுள்ள துருவிய தேங்காயை தூவியபின் பரிமாறினால் அருமையான ருசியில், சுவையான தேங்காய் கேக் ரெடி.