வேலூரில் டாஸ்மாக் கடையில் விற்பனையாளரிடம் ரசீது கேட்ட இளைஞரை விற்பனையாளர் தாக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள டாஸ்மாக் கடையில் மதுபானம் வாங்கியதற்காக விற்பனையாளரிடம் இளைஞர் ஒருவர் ரசீது கேட்டுள்ளதாக சொல்லப்படுகின்றது. அதற்க்கு அந்த விற்பனையாளர் அந்த இளைஞருக்கு இடையே தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றி கைகலப்பாகியுள்ளது.
இதனால் அந்த இளைஞரை எட்டி உதைத்து தாக்கும் சம்பவம் சமூக தளத்தில் வேகமாக பரவி வருகின்றன அருகே டாஸ்மாக் கடை விற்பனையாளர் அட்டூழியத் தாக்குதலில் மயங்கி விழுந்த இளைஞர் முகத்தில் தண்ணீர் தெளித்து அருகில் இருந்தவர்கள் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.