ரஷ்ய ஜனாதிபதி புடின் தன் நடவடிக்கைகளுக்கு எதிரானவர்களை கொலை செய்ய திட்டமிட்ட பட்டியல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவின் ஜனாதிபதியான புடின் தன் நிர்வாகத்தின் நடவடிக்கைகளை, எதிர்ப்பவர்களை கொலை செய்யும் முடிவில் அதற்கான ஒரு பட்டியலை வெளியிட்டிருக்கிறார் என்று அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் அவரின் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் ஆறு நபர்கள் பிரிட்டனில் தற்போது வசித்து வருகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
உளவு அதிகாரி ஒருவரின் மூலம் மற்றொரு ரகசியமும் வெளியாகியுள்ளது. அதாவது பிரிட்டனில் இருக்கும் Salisbury என்ற பகுதியில் Serjei Skripal என்ற நபர் மிக கடுமையான ரசாயனத்தினால் தாக்கப்பட்டார். இவரை ரஷ்யா பல மாதங்களாக கண்காணித்து வந்துள்ளது. மேலும் இவர் கொலை செய்வதற்காக குறி வைக்கப்பட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து ரஷ்ய அரசால் குறி வைக்கப்பட்ட நபர் ஒருவருக்கு, ஒரு உளவு அதிகாரி ரகசிய கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டிருந்ததாவது, உங்களுக்கு மிக அருகில் அவர்கள் நெருங்கிவிட்டார்கள். எனவே விரைவாக தற்போதுள்ள இடத்திலிருந்து வேறு இடத்திற்கு செல்லுங்கள் என்று எழுதப்பட்டிருந்துள்ளது.
மேலும் இதுபோன்ற திடீர் அதிரடி நடவடிக்கையை ரஷ்ய ஜனாதிபதி மேற்கொள்ள என்ன காரணம்? என்று தகவல் தற்போது கிடைத்துள்ளது. அதாவது பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையில் கடந்த வாரத்தில் நாட்டினுடைய பாதுகாப்பு மற்றும் ஆபத்து குறித்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
அதில் பிரிட்டனிற்கு மிக ஆபத்தாக இருக்கும் நாடு ரஷ்யா என்று அறியப்பட்டு, அதற்கென்று தற்காப்பு நடவடிக்கைகளும் செயல்படுத்தப்பட்டன. இந்நிலையில் தான் ரஷ்ய ஜனாதிபதி கொலைக்கான பட்டியலை வெளியிட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. மேலும் ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவரான அலெக்ஸி நவாலினி க்கு ஆதரவாக இறுக்கும் நபர்களை ஜனாதிபதி குறிவைத்திருப்பதாகவும் தெரியவந்துள்ளது.