இனி தவறு செய்யமாட்டோம் என்று ரூட் தல என்ற பெயரில் இனி குற்ற செயல்களில் ஈடுபடமாட்டோம் என்று போலீசார் முன்பு உறுதி மொழி எடுத்துள்ளனர்.
சென்னை அரும்பாக்கத்தில் சென்னை பச்சையப்பன் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் அரசு பேருந்தில் கத்தியால் தாக்கிக் கொண்ட காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து சென்னை முழுவதும் ரூட்டு தல என்ற பெயரில் அராஜகம் செய்து வந்த 90 பேர் அடையாளம் காணப்பட்டனர். இவர்கள் அனைவரும் இனி எந்த வித குற்ற செயல்களில் ஈடுபடமாட்டோம் என்று போலீசார் முன்பு நன்னடத்தை உறுதிமொழி அளித்துள்ளனர.
ரூட் தல என்ற பெயரில் அடாவடித்தனம் செய்து வந்த பச்சையப்பன் கல்லூரி , மாநிலக் கல்லூரி , புதுக்கல்லூரி மாணவரிடம் குற்றவியல் நடைமுறை சட்டத்தின் படி இனி எந்த தவறும் செய்ய மாட்டோம் என்று போலீசார் பிரமாண பத்திரம் எழுதி வாங்கியுள்ளனர். அதன்படி இனி குற்றச் செயல்களில் ஈடுபட்டால் சட்டப்படி வழங்கப்படும் தண்டனையை ஏற்றுக் கொள்வதாக மாணவர்கள் உறுதியளித்திருக்கிறார்கள்.