கோட்டா அருகே ஓடும் ரயிலில் வெளிநாட்டு பெண்ணுக்கு ரயில்வே துறையை சேர்ந்த காவலர் ஒருவர் பாலியல் தொல்லை தந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜிம்பாவே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் நேற்று மும்பை அமிர்தசரஸ் ரயிலில் தனது நண்பருடன் சென்று கொண்டிருந்தார் . அப்போது இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவர் அந்த பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் ரத்லாம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனை ஆர்.பி.எஃப் கமாண்டன்ட் விஜய் பண்டிட் ஏ.எஸ்.பி தினேஷ் கனாஜியாவி கவனித்து வருகிறார். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது போன்று மேலும் இரண்டு காவலர்கள் தவறான முறையில் நடந்து கொள்வதாகவும் புகார்கள் எழுந்துள்ளது.