3 வது டி -20 போட்டியில் ஜிம்பாப்வே அணியைத் தோற்கடித்து 47 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது.
ஆப்கானிஸ்தான்- ஜிம்பாப்வே என்ற இரண்டு அணிகளுக்கும் இடையிலான இரண்டு டெஸ்ட் போட்டி மற்றும் 3 வது டி-20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடர் ஆட்டம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுள்ளது. இந்த தொடரில் முதல் டெஸ்டில் 10 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாவே அணியும், இரண்டாவது டெஸ்டில் ஆப்கானிஸ்தான் அணி 6 விக்கெட்டிலும் வெற்றி பெற்று தொடரை சமநிலைப்படுத்தி உள்ளன. இதனை அடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான டி-20 போட்டிகளில் ஆப்கானிஸ்தான் அணி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று 2-0 என்ற முன்னிலையில் நிற்கின்றது.
இந்த நிலையில் இரண்டு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது டி20 போட்டி நேற்று நடைபெற்றுள்ளது. அதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி தேர்வு செய்து முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் நஜிபுல்லா அதிரடியாக ஆடி 72 ரன்கள் எடுத்துள்ளார். உஸ்மான் கனி 39 ரன்கள் எடுத்துள்ளார். இறுதியாக ஆப்கானிஸ்தான் அணி 7 விக்கெட்டுக்கு 164 ரன்கள் எடுத்துள்ளது. அடுத்து களமிறங்கிய ஜிம்பாப்வே அணியில் சிக்கந்தர் ராசா 44 ரன்னும், ரியான் 39 ரன்கள் எடுத்துள்ளார். இறுதியாக ஜிம்பாப்வே அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 136 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ஆப்கானிஸ்தான்அணி ஜிம்பாப்வேயை வீழ்த்தி 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றி வெற்றி பெற்றது.