Categories
விளையாட்டு

விளையாட்டு வானத்தில் மற்றொரு தமிழக  நட்சத்திரம்…தடகள போட்டியில் வெற்றி பெற்ற…தனலட்சுமியை பாராட்டிய மு. க .ஸ்டாலின்…!!!

தடகள போட்டிகளில் விளையாடிய திருச்சியை சேர்ந்த தனலட்சுமி 2 பதக்கங்களை வென்றார். இதற்கு முக ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இந்த தடகள  போட்டிகள் பாட்டியாலாவில் நடைபெற்று வருகிறது  . இதில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த தனலட்சுமி  2 பதக்கங்களை வென்று  சாதனை படைத்தார்.இதற்கு திமுக தலைவரான மு.க.ஸ்டாலின் , அவருக்குப் பாராட்டு தெரிவித்தார் . இதுபற்றி அவருடைய ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பது, விளையாட்டு வானத்தில் மற்றொரு தமிழக  நட்சத்திரம் ஜொலிக்கிறது.

தடகள போட்டியில் வெற்றி பெற்ற  தனலட்சுமிக்கு  என்னுடைய வாழ்த்துக்கள்.மின்னலாய் ஓடும் தனலட்சுமியின் சாதனைகள் , பல உயரங்கள் வரை  கொண்டுசெல்லும் .இவ்வாறு திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் வெற்றி பெற்ற தனலட்சுமியை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்தார். இதுபோல பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் ,அதிகாரிகளும் தனலட்சுமிக்கு  தங்களுடைய பாராட்டை தெரிவித்து வருகின்றனர் .

Categories

Tech |