லண்டனில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்த இளைஞனுக்கு 6 வாரங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி மாதம் 25ஆம் தேதி லண்டனைச் சேர்ந்த மார்க் ரோனால்ட்சன் என்ற நபர் சாலையில் நடந்து சென்ற இளம்பெண்ணை பின்தொடர்ந்த சென்றுள்ளார். அந்த பெண் மார்க்கிடம் ஏன் என்னை பின்தொடர்கிறாய்? என்று கேட்டுள்ளார். அதற்கு மார்க் அந்த பெண்ணை மோசமான வார்த்தையால் திட்டிவிட்டு உன் வீட்டிற்குள் வந்து உன்னை பாலியல் வன்கொடுமை செய்வேன் என்று மிரட்டியுள்ளார்.
இதே போன்று கடந்த மாதம் 12ம் தேதியும் 21ம் தேதியும் அதே பெண்ணிடம் மீண்டும் மீண்டும் மார்க் மோசமான முறையில் நடந்து கொண்டிருந்திருக்கிறார். அப்போது மார்க் திட்டுவதை அந்த பெண் வீடியோவாக எடுத்து காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் காவல்துறையினர் மார்க்கை கைது செய்துள்ளனர்.
மேலும் அவர் மீது நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் நீதிபதி ஆறு வாரங்கள் சிறை தண்டனை விதித்துள்ளார். இது குறித்து காவல்துறை அதிகாரி கூறியபோது, ” இது போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டால் பெண்கள் தைரியமாகக் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.