தமிழகம் முழுவதும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அசுரவேகத்தில் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுக்குள் கொண்டுவர தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்றவற்றை நடைமுறைப்படுத்தி வருகின்றனர். 9 10 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க தமிழக அரசு பரிசீலனை செய்து வருகிறது. பள்ளிகளுக்கு விடுமுறை அளித்த நிலையில் கல்லூரிகளுக்கும் விடுமுறை விட ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆன்லைன் வகுப்புகள் மற்றும் தொடரும் என்று கூறப்பட்டுள்ளது.