Categories
அரசியல் புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

ஆலங்குடி சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

முழுமையாக விவசாயத்தை சார்ந்து உள்ள பகுதியாக ஆலங்குடி தொகுதி உள்ளது. மா, பலா, வாழை என முக்கனிகளும் விலையும் பூமி ஆகும். விவசாயம் சார்ந்த தொழில்களான கடலை மில்களும், கயிறு தயாரிக்கும் சிறு ஆலைகளும் இங்கு உள்ளன. ஆசியாவிலேயே குதிரை சிலை உள்ள குலமங்கலம் குதிரை கோவில்இத்தொகுதியில் தான் அமைந்துள்ளது. ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் திமுக மற்றும் அதிமுக தலா 6 முறை வெற்றி பெற்றுள்ளனர். காங்கிரஸ் 2 முறை வென்றுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் சுயேட்சை வேட்பாளர் தலா ஒரு முறை வெற்றி பெற்றுள்ளனர்.

தற்போது திமுகவின் மெய்யநாதன் எம்எல்ஏவாக உள்ளார். ஆலங்குடியில் மொத்தம் 2,16,930 வாக்காளர்கள் உள்ளனர். மலர்களும் முக்கனியும் விளைவிக்கப்படும் பகுதி என்பதால் வாசனை திரவிய தொழிற்சாலைகளும், குளிர்பதன கிடங்கு வேண்டும் என விவசாயிகள் கூறுகின்றனர். கடலை உள்ளிட்ட விலை விலை பொருட்களை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்பது விவசாயிகளின் பிரதான கோரிக்கையாகும். அரசு கலைக் கல்லூரியும், வேளான் கல்லூரியும்  தொடங்க வேண்டும் என்றும் மக்கள் வலியுறுத்துகின்றனர்.

கீரமங்கலம் பகுதியை தனி ஒன்றியம் ஆக அறிவிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கின்றனர். மூடப்பட்ட உழவர் சந்தையை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கின்றனர். பராமரிப்பு இல்லாத பூங்காவில் சமூக விரோத செயல்கள் நடைபெறுவதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். ஆலங்குடியில் பேருந்து நிலையம் மற்றும் சாலை வசதிகளை மேம்படுத்த வேண்டும், அடிக்கடி பழுதாகும் மின்மாற்றிகளை பழுது நீக்கி மின்வெட்டை தடுக்கவேண்டும், நெடுவாசல் போராட்டத்தின்போது உறுதியளித்தபடி ஹைட்ரோ கார்பன் திட்டம் சோதனைகளை அகற்றி நிலத்தை ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கை பட்டியல் நீள்கிறது.

Categories

Tech |