Categories
சினிமா தமிழ் சினிமா

சூர்யாவின் அறக்கட்டளையால் வெற்றியடைந்த மாணவி…. நடிகர் கார்த்தி நெகிழ்ச்சியுடன் பாராட்டு…!!

முன்னணி நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளை மூலம் கல்வி பயின்ற மாணவியை பிரபல நடிகர் கார்த்தி பாராட்டியுள்ளார்.

கடந்த 2012 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற ஒரு மாணவி தீ விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கடும் காயங்களிழும் அம்மாணவி  தொடர்ந்து படிக்க ஆசைப்பட்டு உள்ளார். இதனை அறிந்த முன்னணி நடிகர் சூர்யா மாணவியின் தீக்காயங்கள் சிறிது குணம் அடைந்தவுடன் அவரை அவரது “அகரம் அறக்கட்டளை” மூலம் சென்னையில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் சேர்த்தார்.

அதன் பின் திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் பொறியியல் கல்வி பயில வைத்தார். கல்வி பயின்று முடித்த அப்பெண் தான் காயங்களுக்கு சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனையிலேயே பணியாற்றி வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த மருத்துவமனையில் விழாவில் ஒன்று நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக சூர்யாவின் தம்பியும் பிரபல நடிகருமான கார்த்தி கலந்து கொண்டார். அப்போது அகரம் அறக்கட்டளை மூலம் கல்வி பயின்ற அம்மாணவி கார்த்தியை  வரவேற்றார். அகரம் அறக்கட்டளை மூலம் கல்வி பயின்று வெற்றி பெற்ற மாணவியை கண்டு நெகிழ்ந்து போன கார்த்தி அப்பெண்ணை பாராட்டியுள்ளார்.

அகரம் அறக்கட்டளையால் உயர்ந்த பெண்ணைக் கண்டு நெகிழ்ந்து போன நடிகர் கார்த்தி

 

Categories

Tech |