ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிடாவிட்டால் தமிழகத்தில் புரட்சி வெடிக்கும் என்று நாடாளுமன்றத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எச்சரித்துள்ளார்.
மாநிலங்களவையில் பேசிய அவர் தமிழக மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும் மீறி ஹைட்ரோகார்பன் திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுவது ஜனநாயக விரோதப் போக்கு என்று என்று சாடினார். திட்டத்தை நிறைவேற்றினால் காவிரி பாசன மாவட்டங்களில் பாலைவனமாகிவிடும் என்று அவர் கவலை தெரிவித்தார். மத்திய அரசுக்கு ஏராளமான வருவாய் கிடைக்கும்.
ஆனால் தமிழ்நாட்டிலோ காவிரி பாசன மாவட்டங்களில் பெரும்பாலான இடங்கள் பாலை வானம் ஆகிவிடும்.எத்தியோப்பியா மாறி தமிழ்நாடு , எங்களது சந்ததியினர் பிச்சை எடுக்கும் அவலம் ஏற்படும். ஆகவே மத்திய அரசு இத்திட்டத்தை கைவிட வேண்டும்.வேதாந்தா , ஓஎன்ஜிசி-யின் பணிகளை நிறுத்த வேண்டும் இல்லாவிட்டால் தமிழ்நாட்டில் மக்கள் புரட்சி வெடிக்கும். இதனால் மத்திய அரசு மோசமான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கிறேன் என்று வைகோ தெரிவித்தார்.