மூன்று வயது ஆவதற்கு முன்னரே இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து சிறுவன் அசத்தியுள்ளார்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சேரன் நகரில் ஜான்பால் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கௌதமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு விதுஷன் என்ற மகன் உள்ளான். இந்த சிறுவன் தனக்கு மூன்று வயது ஆவதற்கு முன்னரே தேசிய அளவில் சாதனையாளர்களின் திறமைகளை அங்கீகரிக்கும் இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பெற்று சாதனை படைத்துள்ளான். இந்த சிறுவன் 1 நிமிடம் 6 வினாடிகளில் 60 தமிழ் வருடங்களை கூறி அசத்தியுள்ளார்.
அதோடு திருக்குறள், எட்டுத்தொகை, ஐம்பெருங்காப்பியங்கள் போன்ற நூல்களின் பெயர்களை கூறுவதோடு, 15க்கும் மேற்பட்ட உடல் உறுப்புகள், 12 மாதங்களின் பெயர்கள், எட்டு கோள்களின் பெயர், வாரத்தின் நாட்கள், எண்களின் பெயர் போன்றவற்றை தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் அந்த சிறுவன் அருமையாக கூறியுள்ளார். இதனை தொடர்ந்து இந்த சிறுவன் வீட்டு உபயோக பொருட்கள், வண்ணங்கள், பறவைகள், விலங்குகள், பழங்கள், வடிவங்கள் 15க்கும் மேற்பட்ட வாகனங்களின் பெயர்கள், பூக்களின் பெயர்கள் போன்றவை அழகாக கூறியதால் இந்திய சாதனை புத்தகம் இச்சிறுவனின் திறமையை அங்கீகரித்து பாராட்டு சான்றிதழ் மற்றும் தங்க பதக்கத்தை வழங்கியுள்ளது.