Categories
சினிமா தமிழ் சினிமா

கார்த்தியின் “சுல்தான்” ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது…? படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

கார்த்திக்கின் சுல்தான் பட ட்ரெய்லர் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

முன்னணி நடிகர் கார்த்திக் நடித்துள்ள படம் சுல்தான். இப்படத்தை பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ளார். இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்திற்கு விவேக்-மெர்வின் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளது.

தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. இப்படம் வரும் ஏப்ரல் 2ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் சுல்தான் படத்தின் டிரெய்லர் எப்போது ரிலீசாகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி வரும் மார்ச் 24ஆம் தேதி மாலை 5 மணிக்கு சுல்தான் படத்தில் டிரெய்லர் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |