Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இறந்து கிடந்த புள்ளி மான்…. இறை தேட வந்ததால் பரிதாபம்…. விசாரணையில் வெளியான உண்மை…!!

நாய்கள் கடித்து குதறியதால் புள்ளிமான் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு வனத்துறை அதிகாரிகளுக்கு விடத்தகுளம் கண்மாய் கரையில் மான் இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி வனசரக அலுவலர் கோவிந்தன் தலைமையில், வேட்டை தடுப்பு காவலர்கள் பிரபு வனசரக அலுவலர் விஜய் பாண்டியன் போன்றோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மானை பார்வையிட்டு விசாரணை நடத்தியுள்ளனர்.

அப்போது விடத்தகுளம் கண்மாய் பகுதிக்கு இரை தேடுவதற்காக வந்த மானை நாய்கள் கடித்து குதறியது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து புளியங்குளம் உதவி கால்நடை மருத்துவர் திருவளவன் முன்னிலையில் இறந்த மானின் உடலை பிரேத பரிசோதனை செய்து வனத்துறையினர் காட்டில் புதைத்து விட்டனர்.

Categories

Tech |