Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“ஆசையா வளர்த்தோம்”, காலையில பார்த்தா காணோம்…. உரிமையாளர் கொடுத்த புகார்…. வலைவீசி தேடிக் கொடுத்த போலீஸ்….!!

நெல்லையில் ஆட்டுக்குட்டியை திருடி சென்ற வாலிபரை காவலர்கள் கைது செய்தனர்.

தற்போது உள்ள காலகட்டத்தில் கொள்ளை செயல்கள் மிக அதிக அளவில் நடைபெறுகிறது. இதில் சில நபர்கள் கணினி மூலமாகவும் சிலர் நேரடியாகவும் களத்தில் இறங்கிய திருட்டுச் சம்பவத்தில் ஈடுபடுகிறார்கள். இச்சம்பவத்தில் கொள்ளையர்கள் பணத்தினையோ அல்லது பொருட்களையோ திருடி செல்கிறார்கள். அந்த வகையில் நெல்லை மாவட்டம் சுத்தமல்லி அருகே அருணாச்சலம் மற்றும் அவரது மனைவி சொர்ணம் வசித்து வருகிறார்கள். இவர்கள் ஆட்டுக்கிடாய்களை வளர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் ஆட்டுக்குட்டிகளை மேய்ச்சலுக்கு ஓட்டி சென்றுவிட்டு மாலை நேரத்தில் வீட்டின் முன்பு கட்டியுள்ளார்கள். இதனைத் தொடர்ந்து காலையில் எழுந்து பார்க்கும் பொழுது ஆட்டுக்கிடாய் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இச்சம்பவம் குறித்து போலிஸில் புகார் கொடுத்ததையடுத்து காவல்துறையினர் தொடர் விசாரணை நடத்தினர். இதில் ஆட்டுக்கிடாயை அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் திருடியது அம்பலமானது.இதனால் காவல்துறையினர் அவரை கைது செய்ததோடு மட்டுமல்லாமல் ஆட்டுக்கிடாயை உரிமையாளர்களிடம் ஒப்படைத்தது.

Categories

Tech |