ஜெர்மனியில் நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கை எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்துவதோடு காவல்துறைஅதிகாரிகளையும் தாக்கியுள்ளனர்.
ஜெர்மனியில் கொரனோ பாதிப்பை கட்டுப்படுத்த ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுமார் 20 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த சமயத்தில் Kassel என்ற பகுதியில் பாதுகாப்புப்படை உறுப்பினர்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்கியுள்ளனர்.
ஆனால் இந்த போராட்டத்தின் இடையில் பல கலவரங்கள் நடந்ததாகவும் கொரோனா அதிகரித்துவரும் இந்த காலக்கட்டத்தில் அதிகமான நபர்கள் முகக்கவசம் அணியவில்லை என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் இது குறித்து உள்ளூர் காவல் துறையினர் ட்விட்டர் பதிவில் இந்த வன்முறைகளை பொறுத்துக்கொள்ள முடியாது.
மேலும் இது அமைதியான ஆர்ப்பாட்டங்கள் போன்று தெரியவில்லை என்று குறிப்பிட்டுள்ளனர். மேலும் போராட்டம் நடத்துபவர்களை தடுக்க முயன்ற காவல்துறையினரையும் தாக்கியிருக்கின்றனர். இது மட்டுமன்றி போராட்டம் நடத்த அனுமதி பெற்ற பகுதியையும் போராட்டக்காரர்கள் தாண்டியுள்ளனர்.
இதனை கட்டுப்படுத்த தண்ணீர்ப்பீரங்கியை காவல்துறையினர் பயன்படுத்தியதால் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டு, சண்டையாக மாறி தடிகளையும் பயன்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளனர். தற்போது ஜெர்மனியில் கொரோனாவின் 3ஆம் அலை பரவி வருகிறது.
கடந்த சனிக்கிழமை அன்று மட்டுமே சுமார் 16 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் கொரோனாவால் பாதிப்படைந்ததாக தெரியவந்துள்ளது. இந்த சூழ்நிலையில் ஊரடங்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் மக்கள் பங்கேற்று வருவதால் அரசுக்கு புதிய சிக்கல் உருவாகியுள்ளது.