மருத்துவ படிப்பில் அகில இந்திய தொகுப்பில் 25 சதவீத இட ஒதுக்கீடு தராதது குறித்து திமுக MP வில்சன் கவலை தெரிவித்தார்.
மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய தொகுப்பில் மாநிலங்களுக்கும் 25 % இட ஒதுக்கீடு கடைப்பிடிக்கப்படுவது குறித்து முறையிட்டார். அகில இந்திய தொகுப்பிற்கு மாநிலங்களில் தரும் இடங்களில் மத்திய அரசு 25 % இட ஒதுக்கீட்டை பின்பற்றப்படுவதில்லை. எனவே அகில இந்திய தொகுப்பில் வரும் மருத்துவ இடங்களுக்கு அந்தந்த மாநிலங்களில் இட ஒதிக்கீடு பின்பற்றப்படுவதில்லை.
ஆகவே ஒவ்வொரு மாநிலமும் இட ஒதுக்கீடு தர வேண்டிய மருத்துவ இடங்களை இழக்கும் நிலை ஏற்படுகிறது.மாநிலங்களில் உள்ள 8137 இடங்களில் ஓபிசி பிரிவினருக்கு வெறும் 224 இடங்கள் 224 இடங்கள் மட்டுமே கிடைத்தது என்று அவர் சுட்டிக்காட்டினார். மேலும் பொருளாதார அடிப்படையில் உயர்சாதியினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப் படுவதற்கு திமுக MP வில்சன் எதிர்ப்பை பதிவு செய்தார்