Categories
உலக செய்திகள்

பெரும் பரபரப்பு…!! பத்திரிக்கையாளர் சுட்டுக்கொலை… குற்றச்சாட்டை முன்வைக்கும் ஊடகவியலாளர்கள்…!!

பாகிஸ்தானில் மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தி பத்திரிக்கையாளரை கொன்றுள்ளனர்.

பாகிஸ்தானில் பத்திரிக்கையாளராக பணிபுரிந்த அஜய் லால்வானி என்பவர் மார்ச் 18ஆம் தேதி சுக்கூரில் உள்ள முடிதிருத்தும் கடையில் அமர்ந்திருந்தார். அப்போது திடீரென்று 2 இரு சக்கர வாகனங்களிலும், 1 காரிலும் வந்த மர்ம நபர்கள் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பி சென்றனர். பின்னர்  உடனடியாக அஜய்  மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து அஜயின் தந்தை திலீப்குமார் கூறியதாவது, ” எனது குடும்பத்திற்கு எந்த முன்விரோதமுமே  கிடையாது. இது தனிப்பட்ட விரோதத்தால்  மட்டுமே நடந்துள்ளது” என்று கூறியுள்ளார். ஆனால் அவர் கூறிய இந்த தகவலை காவல்துறையினர் நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மூன்று நபர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஊடகவியலாளர்களின் குழு அஜயின் இறுதி சடங்கிற்கு பிறகு அணிவகுப்பு நடத்தி இந்த கொலைக்கு சுக்கூர் காவல்துறையினரே பொறுப்பேற்க வேண்டும் என்றும் இந்த தாக்குதல் சம்பவமானது நோக்கத்துடன்தான் செய்யப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளனர்.

Categories

Tech |