நாடு முழுவதும் மார்ச் 27 முதல் ஏப்ரல் 4 ஆம் தேதி வரை வங்கிகள் இரண்டு நாட்கள் மட்டுமே செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் கடந்த வாரம் வங்கிகள் தனியார் மயமாக்கம் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இரண்டு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் நாடு முழுவதும் உள்ள வங்கி வாடிக்கையாளர்கள் அனைவரும் பெரும் அவதிப்பட்டனர். அதுமட்டுமன்றி ஏடிஎம் மையங்களில் பணம் தட்டுப்பாடு ஏற்பட்டது. அதன்பிறகு வங்கிகள் தனியார் மயமாக்கபடாது என உறுதி அளித்த பிறகு வங்கி ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இந்நிலையில் வருகின்ற மார்ச் 27 முதல் ஏப்ரல் 4ஆம் தேதி வரை வங்கிகள் இரண்டு நாட்கள் மட்டுமே செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி மார்ச் 27 4-வது சனிக்கிழமை, 28 ஆம் தேதி ஞாயிறு, 29ஆம் தேதி ஹோலி பண்டிகை விடுமுறை காரணமாக மூன்று நாட்கள் வங்கிகள் இயங்காது. மார்ச் 30ஆம் தேதி பாட்னாவில் மட்டும் வங்கிகளுக்கு விடுமுறை, மார்ச்சு 31 நிதி ஆண்டின் கடைசி நாளில் விடுமுறை. ஏப்ரல் 1 வருடாந்திர கணக்கு நிறைவு நாள், 2 புனித வெள்ளி, 4 ஆம் தேதி ஞாயிறு விடுமுறை என அடுத்தடுத்து விடுமுறைகள் இருப்பதால், வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஏதாவது வங்கி தொடர்பான வேலைகள் இருந்தால் விரைந்து முடித்து கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.