Categories
சென்னை மாவட்ட செய்திகள்

FLASH NEWS: சென்னையில் நாளை முதல் ரத்து… வெளியான அதிரடி உத்தரவு…!!!

சென்னை புறநகர் ரயில் சேவை நாளை முதல் பகுதியாக ரத்து செய்யப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன் முக்கிய பகுதியாக போக்குவரத்து சேவை மீண்டும் இயக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் குறைந்த அளவிலான பேருந்துகள் மற்றும் ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் நாளை முதல் சென்னை புறநகர் ரயில்சேவை பகுதியாக ரத்து செய்யப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்ட்ரல்-கூடூர், ஏறாவூர்-கும்மிடிபூண்டி இடையே பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் ரயில் சேவை பகுதி நேரமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |