Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“என்ன கொடுமை!”.. சொந்த மகளையே துன்புறுத்தி வந்த தந்தை.. நீதிமன்றத்தின் தீர்ப்பு..!!

புதுக்கோட்டையில் தான் பெற்ற மகளிடமே தவறாக நடந்துகொண்ட விவசாயிக்கு 7 வ்ருட சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

புதுக்கோட்டையில் உள்ள ஆவுடையார் கோயில் பகுதியில் வசிக்கும் ஒரு விவசாயி, 17 வயதாகும் தன் சொந்த மகளையே பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் மகளிர் காவல் நிலையம் ஒன்றில் கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து போக்சோ சட்டத்தின் இரு பிரிவுகளின் கீழ் அந்த விவசாயியை கைது செய்துள்ளனர். இதனைத்தொடர்ந்து புதுக்கோட்டை மஹிளா நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்றுள்ளது. இதனை விசாரித்த நீதிபதி டாக்டர் சத்யா, தான் பெற்ற மகளிடமே தவறான முறையில் நடந்து கொண்டதால் 7 வருட சிறை தண்டனை மற்றும் 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு அளித்திருக்கிறார்.

மேலும் அரசு தரப்பில் அந்த சிறுமிக்கு 2 லட்சம் ரூபாய் வழங்குவதற்கு உத்தரவிட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் விவசாயி அடைக்கப்பட்டுள்ளார்.

Categories

Tech |