நெல்லையில் மணல் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டவர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டது.
தற்போது உள்ள காலத்தில் அனைத்து பகுதிகளிலும் எவரேனும் சட்டத்திற்குப் புறம்பான குற்றச்செயல்களில் ஈடுபட்டுக் கொண்டுதான் வருகிறார்கள். இச்செயல்களில் மிக முக்கியமாக ஒன்றாக மணல் கொள்ளை கருதப்படுகிறது. ஏனெனில் மணல் கடத்தலால் இயற்கை வளம் மிகவும் பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் சில சமயங்களில் உயிர் பலியும் நேருகிறது. இக்குற்றச் செயல்களை தடுக்க காவல்துறையினர் பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் ஆங்காங்கே இச்செயல்கள் மறைமுகமாக நடைபெற்றுக் கொண்டுதான் வருகிறது.
அந்த வகையில் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் கணேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் மீது மணல் கடத்தல் வழக்கு பதிவாகியுள்ளதால், கணேஷை கல்லிடைக்குறிச்சி காவல்துறையினர் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர். மேலும் இவர் மீது குண்டாஸ் சட்டம் போடுவதற்காக மாநகர போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், மாவட்ட கலெக்டரிடம் பரிந்துரைத்துள்ளார். இதனை ஏற்றுக்கொண்ட கலெக்டர், கணேஷ் மீது குண்டாஸ் சட்டம் போட உத்தரவிட்டார்.