Categories
உலக செய்திகள்

6 பெண்கள் சுட்டுக்கொலை…. ஆசியா, அமெரிக்கா இடையே இனவெறி தாக்குதல்…!!!

ஆசிய அமெரிக்க சமூகத்தினரிடம் இனவெறி தாக்குதல் குறித்து ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர் . 

அமெரிக்காவில் சில காலங்களாக கொரோனா வைரஸ் பரவிய காரணத்தினால் ஆசிய மற்றும் அமெரிக்ககாரர்களுக்கிடையே இனவெறித் தாக்குதல் நடைபெற்றுக் வருகிறது. ஆசிய மக்களாலே  கொரோனா வைரஸ் பரவியதாக அமெரிக்கா அவர்களின் மீது வெறுப்புணர்வை காட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தலைநகர் அட்லாண்டாவில் ஜார்ஜியா  மாகாணத்தில் உள்ள 3 மசாஜ் சென்டரில் அடுத்தடுத்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் 6 பெண்கள் உட்பட எட்டுப் பேர் சுட்டுக்கொல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் துப்பாக்கி சூடு  நடத்திய 21 வயது ராபர்ட் ஆரோன் லாங்கை போலீசார் கைது செய்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் சென்றுஉள்ளனர்.இதற்காக ஆசியா அமெரிக்கா சமூகத்தின் தலைவர்களை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ்  இந்த இனவெறி தாக்குதலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வேண்டும் என்று  சுமார் 80 நிமிடம் நீடித்த  பேச்சுவார்த்தைக்கு பிறகு அமெரிக்க ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி இருவரும் பத்திரிகைக்காரர்களை சந்தித்து  பேசினார்கள் .

இதனைப்பற்றி ஜோ பைடன் “ஆசிய வம்சாவளிகளின் மீது நமக்கு வெறுப்புணர்வு உண்டாக முக்கிய  காரணமாக  கொரோனா பாதிப்பு ஏற்பட்டதில் இருந்து அதிகமாக காணப்படுகிறது. நம் தேசத்தை இனவெறி என்ற ஒரு கொடிய விஷம் நீண்ட காலமாக தாக்கி வருகிறது. நாம் அனைவரும் ஒருங்கிணைந்து அதை முறியடிக்க வேண்டும் என்று கூறினார். அமெரிக்க மக்களை இனவெறிக்கு எதிராக பேச வேண்டுமென்றும் எங்கேயாவது இனவெறி தாக்குதல் நடைபெற்றால் அங்கு அமெரிக்க காரர்கள் ஒன்றிணைந்து இருக்கவேண்டுமென்றும்  ஜோ பைடன் வலிவுறுத்தினார்.

இம்மாதிரியான இனவெறி தாக்குதலுக்கு நாம் மௌனமாக இருப்பதாகவும் நாம் அவ்வாறு இருக்கக் கூடாது என்றும் குற்றம் சாட்டப்பட்டனர் பலியக்கப்பட்டவர்கள் துன்புறுத்தப்பட்ட வர்கள் வாய் மொழியாக தாக்கப்பட்டனர் உடல் ரீதியாகப் தாக்கப்பட்டனர் என பல காரணங்களால் கொல்லப்பட்டுள்ளனர். ஆசிய அமெரிக்க மக்களின் கதையை கேட்கும்போது இதயமே நொறுங்கும் அளவிற்கு உள்ளதாக கவலையுடன் “ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்தார்.

அமெரிக்காவில் முதல் முறையாக துணை ஜனாதிபதியாக முதல் தெற்காசிய பெண்ணாக கமலா ஹாரிஸ் பதவி  வகித்திருக்கிறார் அவர் இதைப் பற்றி கூறும் பொழுது “மசாஜ் சென்டரில் நடைபெற்ற துப்பாக்கி சூடு விசாரணையில் இருந்தாலும் உண்மை என்னவென்றால் கொல்லப்பட்ட 8 பேரில் 6 பேர் ஆசிய வம்சாவளியை சேர்ந்த பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது . ஆகையால் அமெரிக்காவில் இனவெறி தாக்கம் எப்பொழுதும் நிகழ்ந்து வருவது உண்மைதான் என்றார் மேலும் ஜீனோபோபியா  இருந்து வருவதாகவும் தெரிவித்தார்.

அதன் பிறகு மீண்டும் இதுபோல் இனவெறி தாக்குதல் நடந்தால் ஜனாதிபதியும் நானும் பார்த்துக்கொண்டு அதனை ஆதரிக்க மாட்டோம் என்று உறுதியாக கூறினார். வன்முறை வெறுக்கதத்தக்க குற்றங்கள் மற்றும் பாகுபாடுகளுக்கு எதிராக நாங்கள் எப்பொழுதும் துணை நிற்போம் அது எங்கு எப்பொழுது நிகழ்ந்தாலும் “என்று கமலா ஹாரிஸ் திட்டவட்டமாக தெரிவித்தார்.

Categories

Tech |