மத்திய அரசின் ஜன்தன் யோஜனா திட்டத்தின் மூலம் வங்கிக்கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பெறுவது எப்படி என்று பார்க்கலாம்.
மத்திய அரசின் கீழ் கொண்டுவரப்பட்ட ஜன்தன் யோஜனா அதாவது அனைவருக்கும் வங்கி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ரூபே ஏடிஎம் கார்டு கொடுக்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் ரூ பே கார்டு வைத்திருப்பவர்களுக்கு விபத்து ஏற்பட்டாலோ அல்லது விபத்தின் போது கை கால்களில் பலத்த காயமடைந்தாலோ சுமார் 1 லட்சம் முதல் 2 லட்சம் வரை விபத்து காப்பீடு மத்திய அரசால் வழங்கப்படுகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் ரூபே கார்டு பிளாட்டினமாக இருந்தால் 2 லட்சம் ரூபாயும், கிளாசிக் கார்டாக இருந்தால் 1 லட்சம் ரூபாயும் வழங்கப்படும்.
மேலும் பிளாட்டினம் கார்ட் இருந்தால் விபத்து ஏற்படுவதற்கு 45 நாட்களுக்கு முன்னர் ஒரு தடவை பயன்படுத்தியிருக்க வேண்டும். அதே போல கிளாசிக் கார்ட் ஆக இருந்தால் விபத்து ஏற்படுவதற்கு 90 நாட்களுக்கு முன் ஒரு தடவை பயன்படுத்தி இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே விபத்து காப்பீடு வழங்கப்படும். இது தவிர ரூபே கார்ட் மற்றும் மற்ற ஏடிஎம் கார்டு வைத்திருப்பவர்கள் ஜன்தன் வங்கி கணக்கில் இல்லாமல் மற்ற கணக்குகள் வைத்திருந்தால் அந்த வங்கியில் சென்று விபத்து காப்பீட்டு திட்டங்களை அறிந்து கொள்ளலாம்.
இதில் 2 காப்பீட்டுத் திட்டங்கள் உள்ளன. பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா (தனி நபர் விபத்து காப்பீடு) ,பிரதான் மந்திரி ஜீவன் பீம யோஜனா (தனிநபர் ஆயுள் காப்பீடு திட்டம்). தனிநபர் காப்பீடு திட்டத்தில் வருடத்திற்கு ரூ.12 செலுத்தி வந்தால் ஒரு லட்சம் ரூபாய் கிடைக்கும். அதேபோல ஆயுள் காப்பீடு திட்டத்தில் வருடத்திற்கு ரூ.330 செலுத்தி வந்தால் இரண்டு லட்சம் ரூபாய் காப்பீட்டு தொகையாக பெறலாம்.