Categories
மாநில செய்திகள்

பெங்களூரு மக்களுக்கு ஆபத்து…. கடும் கட்டுப்பாடு…. மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் அதிகரித்து கொண்டிருக்கும் கொரோனா பாதிப்பால் தமிழகம் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள்.

இந்நிலையில் பெங்களுருவில் கடந்த 20 நாட்களில் 400% கொரோனா தொற்று அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. 210 ஆக்க இருந்த தினசரி வைரஸ் தொற்று இதே வேகத்தில் போனால் வரும் 26 ஆம் தேதி 6 ஆயிரம் வரை அதிகரிக்கும் என கூறப்பட்டுள்ளது. மேலும் அரசு கடும் கட்டுப்பாடுகளை விதிக்கவில்லை என்றால் நிலைமை கை மீறி போய்விடும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

Categories

Tech |