Categories
சேலம் மாவட்ட செய்திகள்

என்ன கொத்தடிமையா மாத்திட்டாரு…. தலைமறைவாகிய என் கணவரை கண்டுபிடிச்சி கொடுங்க…. பெண் அளித்த பரபரப்பு புகார்…!!

கடன் தொல்லை அதிகரித்ததால் தலைமறைவாகிய தனது கணவரை மீட்டுத் தர வேண்டி பெண் மனு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டத்திலுள்ள பருத்திக்காடு பகுதியில் புவனேஸ்வரி என்பவர் வசித்து வருகிறார். இவர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தனது தாயுடன் சென்று ஒரு புகார் மனுவை அளித்துள்ளார். அந்த மனுவில் தனது கணவரான கோபால் என்பவருக்கும், தனக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றதாகவும், அப்பகுதியில் உள்ள செங்கல் சூளையில் அவர் பணிபுரிந்து வருவதாகவும் கூறியுள்ளார். அப்போது அந்த செங்கல் சூளையில் கோபால் தனது மனைவியை கொத்தடிமையாக வைத்துவிட்டு 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயை வாங்கிக் கொண்டு அங்கிருந்து காணாமல் போய்விட்டார்.

அதன் பிறகு மீண்டும் தனது தாய் வீட்டிற்கு வந்த புவனேச்வரி திருமணம் முடிந்த சில ஆண்டுகளில் சிலரிடம் வட்டிக்கு பணம் வாங்கியும், மகளிர் குழுவில் பணம் எடுத்தும் தனது கணவரிடம் கொடுத்துள்ளார். மேலும் பெற்றோர் தனக்கு சீர்வரிசையாக கொடுத்த நகைகளையும் கணவரின் வீட்டார்கள் வாங்கிக் கொண்டதாக அதில் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் கடன் தொல்லை அதிகரித்ததால் தனது கணவர் தலைமறைவாக உள்ளதாகவும், அவர் எப்பகுதியில் இருக்கிறார் என்பது அவருடைய பெற்றோருக்கு தெரியும் எனவும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். எனவே எங்களை பணம் கேட்டு மிரட்டும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து எனது கணவரை மீட்டுத்தர வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |