Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இது அவருக்கு எப்படி கெடச்சிது…. நாட்டு துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்ட அண்ணன்…. சகோதரனின் வெறிச்செயலால் பரபரப்பு…!!

சொத்து பிரச்சனை தகராறில் நாட்டு துப்பாக்கி வைத்து அண்ணனை தம்பி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள பொத்தான் பகுதியில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரேவதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். இவருக்கும் அவரது சகோதரரான சந்தோஷ் என்பவருக்கும் தந்தையின் சொத்தை பிரிப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தனக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்து தருமாறு சந்தோஷ் தனது தாய் பெரியதாயிடம் கூறியுள்ளார். இதனையடுத்து எம்.ஜி.ஆர் நகரில் உள்ள வீட்டிற்கு வருமாறு பெரியதாய் தனது மூத்த மகனான செல்வத்தை அழைத்தபோது, சகோதரர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது கோபமடைந்த சந்தோஷ் தான் மறைத்து வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்து செல்வதை சுட்டுக் கொலை செய்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த கொண்டலாம்பட்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செல்வத்தின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சந்தோஷை கைது செய்து விசாரணை நடத்தியபோது அவர் 12 ஆயிரம் ரூபாய்க்கு செல்வராஜ் என்பவரிடமிருந்து நாட்டுத்துப்பாக்கி வாங்கியது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் செல்வராஜ் மற்றும் சந்தோஷ கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |