சாலை பாதுகாப்பு உலக கிரிக்கெட் தொடரில் இந்தியா-இலங்கை அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.
இந்தத் தொடரில் முதலில் அரையிறுதி போட்டியில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் -இந்திய அணிகளுக்கிடையில் நடைபெற்ற போட்டியில் இந்தியா வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதன் பிறகு இரண்டாவது அரையிறுதி சுற்றில் விளையாடிய இலங்கை- தென் ஆப்பிரிக்கா போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றது. இதில் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த தென்ஆப்பிரிக்கா அணி ,இங்கிலாந்து அணியின் பந்து வீச்சுக்கு நிகராக தாக்குப் பிடிக்க முடியாமல் அனைத்து விக்கெட் இழப்பிற்கு 125 ரன்களை எடுத்தது.
இதில் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் நுவான் குலசேகர சிறப்பாக விளையாடி 25 ரன்களில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 126 என்ற ரன்களை இலக்காக வைத்து விளையாடிய இலங்கை அணி 17.2 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி வெற்றி பெற்றது. இலங்கை அணியில் பேக்கிங் செய்த ஜெயசிங்க 47 ரன்களும் மற்றும் தரங்கா 39 ரன்களை எடுத்து அணிக்கு ரன்களை குவித்தனர். இதைத் தொடர்ந்து வருகின்ற 21ஆம் தேதி இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையே இறுதி போட்டி நடைபெற உள்ளது.