சீதாபூர் அருகே பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீதாபூர் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி நேற்று இரவு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து காவல் நிலையத்தில் இந்த சம்பவம் குறித்து புகார் அளித்தனர். விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் சிறுமியை பாலியல் தொல்லை செய்தது தெரியவந்தது. இதையடுத்து மனமுடைந்த சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். புகாரின் அடிப்படையில் சிறுவன் கைது செய்யப்பட்டார்.