மும்பையில் முக கவசம் அணியாததால் அபராதம் விதித்த மும்பை முனிசிபாலிட்டி ஊழியரை பெண் ஒருவர் தாக்கிய வீடியோ வைரலாகி வருகிறது
கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அசுரவேகத்தில் மீண்டும் பரவி வருகிறது. பல இடங்களில் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. இருப்பினும் கடந்த சில தினங்களில் சென்ற வருடம் மார்ச் மாதம் நடந்த அதே வேகத்தில் கொரோனா பரவி வருகிறது. இதன் காரணமாக பல மாநிலங்களில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் முக கவசம் அணிவது, சமூக இடைவெளி போன்ற நடைமுறைகளும் பின்பற்றப்பட்டு வருகின்றது. மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தொற்று அசுர வேகத்தில் பரவி வருவதால் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மும்பை கண்டிவாலி பகுதியில் மாஸ் தணியாத பெண் ஒருவரை சுகாதார ஊழியர் தடுத்து நிறுத்தியுள்ளார். அப்போது ஆட்டோ ரிக்ஷாவில் வந்த பெண்மணி ஒருவர் முகக்கவசம் அணியாததால் அவருக்கு 200 ரூபாய் அபராதம் விதித்தார். அப்போது மாஸ்க் அணியாத பெண் சுகாதார ஊழியரை கரடுமுரடாக தாக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.