மது வாங்க பணம் கொடுக்காததால் தாயின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த மகனை போலீசார் கைது செய்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் கலபுராகி மாவட்டத்தைச் சேர்ந்த பீமாபாய் என்பவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இளையமகன் யெல்லப்பா பூசாரி. இவர் ஒரு மாற்றுத்திறனாளி. இன்று காலை மூத்த மகன் வெளியே சென்றிருந்த போது யெல்லப்பா தாயிடம் மது அருந்த பணம் கேட்டுள்ளார்.
அதற்கு அவர் பணம் கொடுக்க மறுத்ததால் கல்லை தூக்கி தலையில் நான்குமுறை எறிந்து கொலை செய்துள்ளார். இதுகுறித்து காவல் துறையில் புகார் அளிக்க சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் யெல்லப்பாவை கைது செய்தனர். மேலும் உயிரிழந்த அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.