Categories
அரசியல் புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கந்தர்வகோட்டை சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

வானம் பார்த்த பூமியான கந்தர்வகோட்டை வறட்சி பகுதியாகவே காட்சியளிக்கிறது. நார்த்தாமலையில் கற்கோவில்கள் மற்றும் விஜயாலய  சோழனின் குடைவரை கோவில்கள் அமைந்துள்ளன. குன்றாண்டார் கோவில் அருகே குதிரைகள் பூட்டிய தேர் மண்டபம் மேலும் சிறப்பு சேர்க்கிறது. முந்திரி அதிக அளவில் விளைவிக்கப்படும் பகுதியாகவும் கந்தர்வகோட்டை உள்ளது. தொகுதி மறுசீரமைப்பில் உருவான கந்தர்வகோட்டை தொகுதி இரு தேர்தல்களை சந்தித்துள்ளது.

இரு தேர்தல்களிலும் அதிமுகவே வெற்றிபெற்றுள்ளது. தற்போதய எம்எல்ஏ அதிமுகவின் நார்த்தாமலை ஆறுமுகம். கந்தர்வக்கோட்டை தொகுதியின் மொத்த 2,01,071 வாக்காளர்கள் உள்ளனர். கந்தர்வகோட்டை மற்றும் கீரனூர் பேருந்து நிலையங்களில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கும் மக்கள் சுடுகாடு அருகே கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையம் சமூக விரோத செயல்களின் மையமாக செயல்படுவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.

அரசு மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லை என்றும் மக்கள் புகார் கூறுகின்றனர். தூய்மையான குடிநீர் தேவை என்பதை தொகுதியின் பிரதான கோரிக்கையாக உள்ளது. நீர் ஆதாரத்தை பெருக்க வேண்டும் என மக்கள் தெரிவிக்கின்றனர். கீரனூர் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை முறையாக செயல்படவில்லை என்றும் மக்கள் வலியுறுத்துகின்றனர். ராமேஸ்வரம் செல்லும் ரயில் கீரனூர் ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என்று மக்கள் கூறுகின்றனர்.

பரமக்குடியில் கட்டி முடிக்கப்பட்ட பேருந்து நிலையத்தை பயன்பாட்டிற்குக் கொண்டு வரவேண்டும் என்றும் மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர். முந்திரி அதிகம் விளையும் பகுதி என்பதால் முந்திரி பதப்படுத்தும் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது. நீர் பாசன குளங்கள் அனைத்தையும் சீரமைக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

Categories

Tech |