மத்திய பிரதேசத்தில் பெண் ஒருவர் தன்னிடம் தவறாக நடக்க முயன்ற நபரின் பிறப்புறுப்பை வெட்டிவிட்டு காவல்நிலையத்தில் புகாரும் அளித்துள்ளார்.
மத்திய பிரதேசத்தில் உள்ள சித்தி என்ற மாவட்டத்தில் இருக்கும் உமரிஹா பகுதியில் 45 வயதுடைய பெண் ஒருவர் தன் கணவர் வெளியூருக்கு சென்று விட்டதால் தன் மகனுடன் வீட்டில் தனியாக இருந்திருக்கிறார். இதனை அறிந்த மர்ம நபர் ஒருவர் இரவு நேரத்தில் வீட்டிற்குள் திடீரென புகுந்துள்ளார்.
திருடன் என்று நினைத்து பதறிப்போன அந்த பெண் தன் மகனிடம் உடனடியாக வெளியே சென்று அக்கம்பக்கத்தினரை அழைத்து வருமாறு கூறியிருக்கிறார். ஆனால் வீட்டிற்குள் வந்த நபர் அந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். இதனால் அந்த பெண் கட்டிலின் அடியில் கிடந்த அரிவாளால் அந்த நபரின் பிறப்புறுப்பை வெட்டியுள்ளார்.
அதன்பின்பு காவல் நிலையத்திற்கு சென்று புகார் தெரிவித்துள்ளார். இதனைக் கேட்டதும் அதிர்ச்சிக்குள்ளான காவல்துறையினர், உடனடியாக அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று மயங்கிய நிலையில் கிடந்த அந்த நபரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.