Categories
கிரிக்கெட் விளையாட்டு

இங்கிலாந்திற்கு எதிரான டி20 போட்டியில்…சூர்யகுமார் யாதவ் அவுடிற்கு…கண்டனம் தெரிவித்த கோலி …!!!

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நடைபெற்ற  நான்காவது டி20 போட்டியில், விளையாடிய  சூர்யகுமார் யாதவ் அவுட் செய்யப்பட்டது  பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இப்போட்டியானது அகமதாபாத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன் நடந்தது. இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கிடையே நடந்த இப்போட்டியில், இந்தியா 8 ரன்கள்  வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் இந்திய அணியில் விளையாடிய சூர்யகுமார் யாதவ் அவுட் செய்யப்பட்டதற்கு ,கேப்டன் கோலி எதிர்ப்பு தெரிவித்தார். இதைப்பற்றி கேப்டன் விராட் கோலி கூறும்போது, அம்பயரின்  இதுபோன்ற தவறான முடிவுகளால் ,அணியின் வெற்றி நிலையை முழுவதுமாக மாற்றிவிடும்.

இதுபோன்ற சிக்கலான தீர்வுகளுக்கு, தவறான முடிவு எடுப்பதினால் ,அணியின் வெற்றி வாய்ப்பு மாறி விடுவதாக கூறியுள்ளார். எனவே எங்கள் அணி பாதிக்கப்பட்டதை  போன்று, வேறு அணிகள்  பாதிக்கக்கூடாது என்றும் , ஆனால் நடுவர் , டிவி அம்பயரின் உதவியை நாடாமல், சூரிய குமாருக்கு அவுட் கொடுத்துள்ளார். எனவே இதுபோன்ற சிக்கலான தீர்வுகளில் அம்பயர்கள் சரியான முடிவு எடுக்க வேண்டும் என்று கூறினார்.

Categories

Tech |