Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

பட்டப்பகல்ல இப்படி பண்ணிட்டானுங்க… விவசாயி பரபரப்பு புகார்… மர்ம நபர்களுக்கு வலை வீச்சு..!!

பெரம்பலூரில் பட்டப்பகலில் வீட்டின் கதவை உடைத்து பணம் மற்றும் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பசும்பலூர் கிராமத்தில் காசி என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு அருண் பாண்டியன் என்ற மகன் உள்ளார். அருண்பாண்டியன் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் காசி நேற்று முன்தினம் குடும்பத்துடன் வயலுக்கு சென்றுள்ளார். காசியின் மகன் அருண்பாண்டியன் பள்ளிக்கு சென்றுள்ளார். இதையடுத்து மதிய உணவு சாப்பிடுவதற்காக அருண்பாண்டியன் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது பூட்டப்பட்டிருந்த வீட்டின் கதவு உடைக்கப்பட்ட நிலையில் இருந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அவரது தந்தைக்கு தகவல் அளித்துள்ளார். அந்த தகவலின் பேரில் வீட்டிற்கு வந்த காசி பீரோவை சோதித்து பார்த்தார்.

அப்போது பீரோவில் இருந்த ரூ. 50,000 மற்றும் 15 பவுன் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து காசி வி.களத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் அந்த வீட்டில் தடயங்களை சேகரித்து, மோப்ப நாய்களை கொண்டு துப்பு துலைக்கப்பட்டது. அந்த மோப்ப நாய் சிறிது தூரம் ஓடியது ஆனால் யாரையும் பிடித்து கவ்வவில்லை. இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் வீடு புகுந்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் தொலைபேசி தேடி வருகின்றனர் பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Categories

Tech |