Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பங்குனி மாத திருவிழா தொடக்கம்…. கோலாகலமாக நடைபெற்ற கொடியேற்றம்…. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்….!!

நெல்லையில் அமைந்திருக்கும் பெருமாள் கோவிலில் பங்குனி மாத திருவிழாவிற்காக கொடியேற்றம் நடைபெற்றது.

நெல்லை மாவட்டம் களக்காட்டில் வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் நடத்தப்படும் பங்குனி மாத திருவிழாவை முன்னிட்டு கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. இதற்கு முன்னதாக கொடியினை பல்லக்கில் வைத்துக் கொண்டு மேளதாளங்கள் முழங்க உற்சாகத்துடன் ரத வீதிகளில் உலா வந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து கோவில் கொடி மரத்திற்கு சிறப்பு அலங்காரங்களும், ஆராதனைகளும் நடைபெற்றது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் பெருமாளுக்கு பகலில் திருமஞ்சனமும், இரவில் வாகனங்களில் வீதி உலா வருதல் போன்ற நிகழ்ச்சிகளும் நடக்கவிருக்கிறது. இதனைத் தொடர்ந்து வருகின்ற 24 ஆம் தேதி கருட வாகனத்தில வீதி உலாவும், 26ஆம் தேதி திருக்கல்யாணமும், 27 ஆம் தேதி குதிரை வாகனத்தில் வீதி உலாவும், 29ஆம் தேதி தேரோட்டமும், 30 ஆம் தேதி தீர்த்தவாரி விழாவும் நடைபெற உள்ளது.

Categories

Tech |