பெங்களூருவை சேர்ந்த ஒரு இளைஞன் ராகியை சரியாக எண்ணி இந்திய புக் ஆஃ ரெக்கார்டு இடம்பிடித்துள்ளார்.
ராகியை கையில் பிடிப்பது கடினமான ஒன்று. அதை துல்லியமாக எண்ணுவது என்பது மிகவும் கடினமானது. ஆனால் கர்நாடகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இந்த சாதனையை படைத்துள்ளார். மாண்டியா மாவட்டத்தை சேர்ந்த சச்சின் என்பவர் பிகாம் படித்து வருகிறார். சச்சின் படிப்பை பாதியில் விட்டதால் அவரது பெற்றோர்கள் கோபமாக இருந்தன.ர் இதனால் தற்போது மகனை கண்டு பெருமிதம் அடைந்துள்ளனர்.
அவர் 3 லட்சத்து 76 ஆயிரத்து 83 ராசிகளை 146 மணி நேரம் 30 நிமிடங்களில் எண்ணி சாதனை படைத்துள்ளார். ஒற்றை ராகி விதைகளை கையில் பிடிப்பது மிகவும் கடினம். ஆனால் ஒரு கிலோ ராகி எண்ணி மிகுந்த பொறுமையுடன் தனது சாதனையை படைத்துள்ளார். இந்த சாதனை புக் ஆப் ரெக்கார்ட்ஸ் என்ற புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. சச்சினின் சாதனையை கௌரவிக்கும் விதமாக அவரது கடிதத்தையும்,பதக்கமும் கொரியரில் அனுப்பியுள்ளனர்.