Categories
அரசியல் செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

மதுராந்தகம் சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி 4 முறை வெற்றி பெற்றுள்ளது. திமுக 6 முறையும், அதிமுக 5 முறையும் தொகுதியை கைப்பற்றியுள்ளனர்.  தற்போதய எம்.எல்.ஏ திமுகவின் புகழேந்தி. மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,26,3463  ஆகும். மதுராந்தகம் ஏரியை ஆழப்படுத்தி தூர்வார வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கையாக உள்ளது.

நெடுஞ்சாலையை ஒட்டிய பகுதி என்பதால் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் என்றும் மக்கள் வலியுறுத்துகின்றனர். பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று கூறும் மக்கள் மழைக்காலங்களில் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும் குற்றம்சாட்டுகின்றனர். அய்யனார் கோவில், அச்சரப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் சுரங்கப்பாதையுடன் கூடிய மேம்பாலம் கட்டி விபத்துக்களை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தை உலகத் தரத்திற்கு உயர்த்த வேண்டும் என்பது மக்களின் விருப்பம். படாளம் சர்க்கரை ஆலையை முறையாக நடத்த அரசு முன்வர வேண்டும் என்பது விவசாயிகளின் வேண்டுகோளாக உள்ளது. மதுராந்தகத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி, அரசு கலைக் கல்லூரி அமைக்க வேண்டும் என்றும் மக்கள் வலியுறுத்துகின்றனர். வார சந்தையை ஊருக்கு வெளியே இடமாற்றம் செய்ய வேண்டும் என்பதும் மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Categories

Tech |